For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்தமனமானது சூரியன்.. திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.. பெரும் சோகத்தில் தமிழகம்!

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர், திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இதனால் தமிழகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கலைஞர் கருணாநிதி காலமானார் Karunanidhi is no more #Karunanidhi

    சென்னை: குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

    இந்நிலையில் இடையிடையே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாக முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் வருகை தந்திருந்தார்.

    டிரக்கியாஸ்டமி

    டிரக்கியாஸ்டமி

    கடந்த ஜூன் 3-ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். இந்நிலையில் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு தொண்டையில் பொருத்தப்பட்ட டிரக்கியாஸ்டமி கருவி மாற்றப்பட்டது.

     துணை முதல்வர்

    துணை முதல்வர்

    இதற்காக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலையே வீடு திரும்பினார். இருப்பினும் சிறுநீரக தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிலேயே அனைத்து மருத்துவ உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கடந்த வியாழக்கிழமை கருணாநிதியின் உடல்நலம் குறித்து கோபாலபுரம் சென்று, நலம் விசாரித்தனர்.

     சிகிச்சை பலனின்றி

    சிகிச்சை பலனின்றி

    இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ரத்த அழுத்த குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

     செயலிழந்த உறுப்புகள்

    செயலிழந்த உறுப்புகள்

    கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக இன்று மாலாை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மாலை 6.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதை காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

     மூழ்கியது

    மூழ்கியது

    கருணாநிதியின் மறைவால் திமுகவினர் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமிழகமே பெருமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

     இயற்பெயர்

    இயற்பெயர்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு, ஜூன் 3 ம் தேதி, முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் கருணாநிதி. இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.

     5 முறை முதல்வர்

    5 முறை முதல்வர்

    எழுத்து துறை, நாடகம், திரைப்பட வசன கர்த்தா என பன்முக ஆளுமை கொண்டவர் கருணாநிதி. 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார். மொத்தம் 13 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள கருணாநிதி, ஒருமுறை கூட தோற்றது கிடையாது. அமைச்சராகவும, 5 முறை முதல்வராகவும் பணியாற்றியவர், கருணாநிதி.

     கனிமொழி

    கனிமொழி

    குடும்ப வாழ்க்கை: கருணாநிதி மூன்று முறை திருமணம் செய்தவர். முதல் மனைவி பத்மாவதி. அவருக்கு பிறந்தவர், மு.க.முத்து. இதன்பிறகு, சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கருணாநிதியின் இரண்டாவது மனைவி, தயாளு அம்மாள். தயாளு அம்மாளுக்கு, பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. கருணாநிதியின், மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி ஆகும்.

    English summary
    DMK Chief Karunanidhi dies of health conditions, As he had some infection in hs Kidney and had fever.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X