For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவ்ளோ கூட்டம்.. தூரத்தில் நின்றாலும்.. ஸ்டாலின் மனதை வென்ற 'வெற்றிச் செல்வி'

Google Oneindia Tamil News

பட்டுக்கோட்டை: ஒரத்தநாட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலினை, இதற்கு முன் இவ்வளவு எனர்ஜியாக பார்த்ததில்லை என்கின்றனர் உடன் பிறப்புகள்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசார பயணத்தை துரிதப்படுத்தியுளளார். ஒரு தொகுதியில் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை.

அதற்குள் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு, ஸ்பாட்டை காலி செய்து வருகிறார். குறிப்பாக, திமுக வெற்றிப் பெற்றால் அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு என்ன செய்வோம் என்பதையும், முதல்வர் பழனிசாமியை அட்டாக் செய்யும் சில பாயிண்ட்ஸ்களை பேசிவிட்டு கிளம்பிவிடுகிறார்.

 வேட்பாளர்கள் அறிமுகம்

வேட்பாளர்கள் அறிமுகம்

அந்த வகையில், நேற்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். காலை 9 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகே ஸ்டாலின் வேன் வந்தபோது, கூட்டம் ஆர்ப்பரித்தது. தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவையாறு உள்ளிட்ட பகுதிர்களின் வேட்பாளர்களை அங்கு மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டாலின்.

 மாஸ்க் போடுங்க

மாஸ்க் போடுங்க

இதற்காக, சுமார் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். ஸ்டாலின் வழக்கம் போல தனது வேனில் நின்று கொண்டு பேச, தொண்டர்கள் தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றிருந்தார்கள். வந்த உடனேயே, 'எல்லோரும் கண்டிப்பா மாஸ்க் போடுங்க.. கவனமா இருங்க.. அது தான் ரொம்ப முக்கியம்' என்ற ஸ்டாலின், பிறகு ஒவ்வொரு தொகுதி வேட்பாளர்களாக பெயர் அறிவிக்க, 'உள்ளேன் ஐயா' மோடில் வேட்பாளர்கள் கைகளை உயர்த்தினர்.

 குழந்தைக்கு பெயர்

குழந்தைக்கு பெயர்

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் என்ன நினைத்தாரோ, டக்கென்று தனது கூலிங் கிளாஸை எடுத்து, இரண்டு கைகளையும் நீட்டி அப்படி ஸ்டைலாக கண்களில் பொருத்த, கூட்டம் அடங்க வெகுநேரமானது. பிறகு, அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவ்வளவு கூட்டத்திற்கும் இடையில் சற்று தூரத்தில் நின்றிருந்த ஒரு தம்பதி, தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.

 வெற்றிச் செல்வி

வெற்றிச் செல்வி

ஆனால், கூட்டம் காரணமாக குழந்தையை அவர் அருகில் கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஸ்டாலின், மைக்கிலேயே குழந்தை ஆணா, பெண்ணை என்று கேட்க, பெண் குழந்தை என்று பதில் வர, சற்றும் தாமதிக்காத ஸ்டாலின், 'இந்த அழகான அற்புதமான குழந்தைக்கு 'வெற்றிச் செல்வி' என்று பெயரிடுகிறேன் என்றார். அதுவரை சப்தம், இரைச்சல் போன்றவற்றால் அழுது கொண்டே இருந்த குழந்தை, ஸ்டாலின் பெயர் வைத்தவுடன் எழுந்த கரவொலியால் அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது. அதைப் பார்த்த ஸ்டாலினும் சிரிக்க அந்த இடமே அமர்க்களமானது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், மறைந்த முன்னாள் திமுக பொதுச் செயலாளரும் பேராசிரியரருமான க.அன்பழகனின் மனைவி பெயரும் வெற்றிச் செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

வரட்டுமா

வரட்டுமா

பொதுவாக, இதுபோன்ற கூட்டங்களில் ஸ்டாலின் ஒருவித இறுக்கத்துடன் காணப்படுவது வழக்கம். சிரிக்கக் கூட மாட்டார். ஆனால், கூலிங் கிளாஸ் அணிவது, குழந்தைக்கு பெயர் வைப்பது, தொண்டர்களிடம் உற்சாகமாக பேசியது போன்றவை எங்களுக்கே புதிதாக இருந்தது என்று உள்ளூர் உடன்பிறப்புகள் முணுமுணுத்ததை நாம் கேட்க முடிந்தது. இறுதியாக, 'உங்களிடம் அதிகம் பேச வேண்டும் என்று ஆசையுள்ளது. ஆனால், நான் விரைவில் விமானத்தை பிடிக்க வேண்டும்.. வரட்டுமா' என்று கூறி ஸ்டாலின் அங்கிருந்து விடைபெற்றார்.

English summary
dmk chief mk stalin at orathanad campaign and introduced candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X