அரசு போக்குவரத்துக் கழகத்தை சீரமைப்பது எப்படி? ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது திமுக குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது திமுக குழு- வீடியோ

  சென்னை: போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்ட குழு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

  ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை கேட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக போக்குவரத்து கழகம் ரூ. 7000 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் அந்த தொகை கொடுக்க இயலாது என்று தமிழக அரசு கைவிரித்தது.

  DMK committee for regulating transport corporation submits report to MK Stalin

  எனினும் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி நீதிமன்றத்தை அணுகினர். ஓய்வூதிய நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு சதவீதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

  இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆலோசனை தர திமுக குழு ஒன்றை கடந்த மாதம் 28-ஆம் தேதி அமைத்தது. டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தொமுச சண்முகம், செங்குட்டுவன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்றனர்.

  இக்குழுவினர் போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது குறித்த திட்டங்களை அறிக்கையாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர். அவர் இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK Working President MK Stalin sets up the committee for regulating transport corporation. That team submits report to MK Stalin.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற