அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்... அழைப்பு விடுத்த மு.க. ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு, திமுக தலைமை கழகம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் மரணம், கடும் வறட்சி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் என தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கும் தீர்வு காண்பதற்கும் தமிழக அரசு முன்வரவில்லை.

 DMK invited for all party meeting in Anna Arivalayam

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டி உள்ளார்.

இதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் திமுக தலைமை கழகம், தனித்தனியாக அழைப்புவிடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனை முதன்மை விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 32 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK acting leaded MK Stalin invited all party meeting on Sunday. Meeting will be held at Anna arivalayam, chennai
Please Wait while comments are loading...