கருணாநிதிக்கு பாரத ரத்னா!- நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை
சென்னை: திமுக தலைவர் மு கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
திமுகவின் தர்மபுரி தொகுதி எம்.பி ஆர்.தாமரைசெல்வன், 377 விதியின் கீழ் இந்தக் கோரிக்கையை எழுப்பினார்.
இது குறித்து அவர் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான அறிக்கையில், "கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை.

டாக்டர் கலைஞர் என அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர்.
திராவிட இயக்கத்தின் வெற்றி வீரரான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காகவும் சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வி காணாதவர். தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் பாடுபட்ட பெரும் தலைவர்.
கலைத் துறையில் அவர் சாதனை அளப்பரியது. தமிழ்ப் பட உலகின் 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். பாடலாசிரியர், கவிஞர். 91 வயதிலும் சிறந்து விளங்கும் அறிஞர், சிறந்த ராஜதந்திரி.
தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்திற்காக மாநில மற்றும் தேசிய அளவில் பாடுபட்ட அரசியல்வாதி. ஒரு ஸ்டேட்ஸ்மென் அனைத்துக் கட்சியினரும் போற்றும் தலைவர். இந்த வயதில் வேறு எவரும் இவர் அளவுக்கு நாட்டிற்காக பாடுபட்டதில்லை என நம்புகிறேன்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் டாக்டர். கலைஞர் முத்துவேல் கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் அளிப்பதில் என்னுடன் இணைந்து அரசிடம் வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications