For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்குப் பின் "ரீ என்ட்ரி"- மு.க. அழகிரிக்கு முக்கிய பதவி?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர் மு.க. அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டு அவருக்கு முக்கிய பதவியும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக- தேமுதிக கூட்டணிக்கான முயற்சிகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டிருந்தார். இதற்கு மு.க. அழகிரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஸ்டாலின் பற்றி..

ஸ்டாலின் பற்றி..

பின்னர் கருணாநிதியை நேரில் சந்தித்து, மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் செத்துப் போய்விடுவார் என்று அழகிரி கூறப் போய் விவகாரம் வெடித்தது. இதனால் திமுகவை விட்டே மு.க. அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

மீண்டும் திமுகவில்..

மீண்டும் திமுகவில்..

ஆனால் லோக்சபா தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மு.க. அழகிரியை திமுகவில் சேர்ப்பதற்காக முயற்சிகள் கனஜோராக நடைபெற்றன.

கருணாநிதி ஒப்புதல்

கருணாநிதி ஒப்புதல்

கருணாநிதியும் அழகிரியை சேர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது உள்ளாட்சி இடைத் தேர்தல் நேரம்.. அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்து பஞ்சாயத்தை எதிர்கொள்ளாமல் அப்படியே அமைதி காப்பது என்பது கருணாநிதியின் திட்டமாம்.

முக்கிய பொறுப்புடன் ரீ என்ட்ரீ

முக்கிய பொறுப்புடன் ரீ என்ட்ரீ

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் சட்டசபை தேர்தல்களை இலக்கு வைத்து மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறதாம். அத்துடன் மிக முக்கிய பொறுப்பு ஒன்றில் மு.க.அழகிரி நியமிக்கப்படவும் கூடும் என்கின்றன அறிவாலயத் தகவல்கள்.

English summary
Sources said that DMK may revoke the dismiss action against MK Azhagiri after the local body bypoll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X