For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் கைவிட்டதால், பாமகவுக்கு வலை விரிக்கிறது திமுக!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் கை விரித்துவிட்டதால், திமுக கூட்டணி பலவீனமாக காட்சியளிக்கும் நிலையில், வாக்கு வங்கியை உயர்த்தும் நோக்கத்தில் பாமகவுக்கு வலை விரித்துள்ளது திமுக.

சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க ஆயத்தமாகி உள்ளது பாமக. கட்சியின் முதல்வர் வேட்பாளராக, அன்புமணியை களமிறக்கி உள்ளது. பல மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது பாமக.

பாமகவை தங்கள் கூட்டணியில் இணைக்க ஆரம்பத்தில் திமுக முயன்றது. ஸ்டாலின் பற்றி எவ்வளவோ மோசமாக அன்புமணி விமர்சனம் செய்த நிலையிலும், அவரது வீட்டுக்கே சென்று ஸ்டாலின், தனது இல்ல திருமண பத்திரிகையை கொடுத்துவிட்டு வந்தார்.

விஜயகாந்த் பக்கம்

விஜயகாந்த் பக்கம்

ஆனால் அன்புமணி தரப்பில் உக்கிரம் குறையாததால், பாமக பக்கம் திமுக திரும்பவில்லை. தேமுதிகவை வளைப்பதில் திமுக தொடர்ச்சியாக கவனம் செலுத்தியது.

தேமுதிக கைவிட்டது

தேமுதிக கைவிட்டது

இந்நிலையில் தேமுதிக, மக்கள் நல கூட்டணியில் இணைந்துவிட்டது. தே.மு.தி.க., வராததால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்ட, பாமக அவசியம் என்பதை திமுக உணர்ந்துள்ளது.

பாமக வேண்டும்

பாமக வேண்டும்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலம் பெற்ற, பாமகவை, கூட்டணியில் கொண்டு வந்தால் மட்டுமே, அதிமுகவை எதிர்க்கும் பலத்தை திமுகவால் பெற முடியும் என்று திமுக தலைமை நினைக்கிறதாம்.

தென் மாவட்டத்திற்கு காங்கிரஸ்

தென் மாவட்டத்திற்கு காங்கிரஸ்

லோக்சபா தேர்தலில், திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட கிடைக்கவில்லை. அதனால், பலம் வாய்ந்த கூட்டணி அமைந்தால் தான், சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று திமுக நினைக்கிறது. காங்கிரஸ் மீது மக்களுக்கு கோபம் இருந்தாலும், தென் மாநிலங்களிலுள்ள நாடார் சமூகத்தினர், காமராஜருக்காக, கை சின்னத்தில் வாக்களிப்பார்கள் என்று திமுக நம்புகிறது.

வட மாவட்டத்திற்கு பாமக

வட மாவட்டத்திற்கு பாமக

அதேநேரம் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகளை அறுவடை செய்ய பாமக அவசியம் என்று திமுக நினைக்கிறது அதனால், கருணாநிதியே நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார். திமுகவிலுள்ள வன்னியர் சமூக முன்னாள் எம்.பி. ஒருவரும், ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவரும், பாமகவிடம் பேசி வருவதாக தெரிகிறது.

பாமக சம்மதிக்குமா

பாமக சம்மதிக்குமா

அதேநேரம், துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை ஏற்க திமுக தயாராக இல்லையாம். இதனால் பாமக என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை பாமக திமுகவோடு கூட்டணி அமைத்தால், பழம் கனிந்து கொண்டுள்ளது என்று, நான் மாம்பழம் பற்றிதான் கூறினேன் என்று கருணாநிதி கூறிக்கொள்ள வழி ஏற்படும்.

English summary
DMK try to woo PMK for alliance as MDMK made an alliance with People welfare front.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X