வகுப்புவாதம் ஆக்கிரமிக்கும் நேரத்தில் ஒளியாகத் திகழ்கிறார்... ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்காக மனு தாக்கல் செய்திருக்கும் ராகுல்காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : வகுப்புவாதம் நாட்டை ஆக்கிரமிக்கும் நேரத்தில் நம்பிக்கை ஒளியாக ராகுல்காந்தி திகழ்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ள அவருக்கு ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்துகளை கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றோடு முடிகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தேர்தல் முறைப்படி அறிவிக்க வேண்டும் என்பதால் அவர் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைவர் பொறுப்பிற்கு ராகுல்காந்தி தவிர யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் இன்றே காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடைய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு திமுக செயல்தலைவர் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாரம்பரியமிக்க கட்சி
அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசுவதாவது : காங்கிரஸ் பேரியக்கத்தின் தனித்துவம் மிகுந்த பாரம்பரியத்தை யாராலும் மறுத்திட முடியாது. அந்த இயக்கத்தின் தற்போதைய வயது 132. காங்கிரஸ் நம்நாட்டின் பழம்பெரும் கட்சி.

வரலாற்று சிறப்பு
அக்கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் தருணம் அக்கட்சிக்கு மட்டுமின்றி நமது தேசத்திற்கும் முக்கியமான கட்டமாகும். காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு ராகுல்காந்தி முன்மொழியப்படுவது வரலாற்றுடன் இணைந்த சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாகும்.

வகுப்புவாதத்தை முறியடிக்க
இந்திய மக்களுக்காக தங்களை முழுவதுமாக அற்பணித்துக் கொள்ளும் அவர்களின் குடும்பத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக ராகுல் காந்தி இருக்கிறார். வகுப்புவாத மற்றும சர்வாதிகார எண்ணம் கொண்ட சக்திகள் நமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் இந்த வேளையில் அவர் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கிறார்.

ராகுலுக்கு வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக சார்பிலும் கட்சியின் தலைவர் கருணாநிதி சார்பிலும் வாழ்த்துகிறேன். ஜனநாயகம் மதச்சார்பற்ற தன்மை சோஷியலிசம் எனும் மகத்தான லட்சியங்களை மீட்டெடுக்கும் வகையில் ராகுல்காந்தி திறம்பட செயல்பட வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications