For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழை கட்டாயமாக்கச் சொல்லி பள்ளிகளை நிர்பந்திக்க வேண்டாம்... சென்னை உயர்நீதிமன்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக அறிவிப்பதில் மாநில அரசு அதிக கெடுபிடிகளை காட்ட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

2006-ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு, தமிழ் கற்பிப்பு சட்டத்தின் கீழ் தீர்மானம் இயற்றியது. அதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் முதல் மொழியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் மற்றும் புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Don’t compel schools on Tamil as Compulsory Subject: Madras HC

அப்போது, ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழியை முதல்பாடமாக அறிவிப்பதில் அரசு கெடுபிடி காட்ட வேண்டாம் என்றும் மாணவர்களின் விருப்பதிற்கேற்ப முதல் மொழியை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

English summary
Madras High Court says not to compel the schools on implementing Tamil as Compulsory Subject
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X