வெற்றிவேல் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: எம்.பி. வைத்திலிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிவேல் எம்.எல்.ஏ. சொல்வதை யாரும் ஏற்க வேண்டாம். அவர் கூறுவதில் எந்த அதிகாரமும் இல்லை என்று அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா குடும்பத்தாரின் தலையீடு இருக்கக் கூடாது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற இந்த இரண்டு நிபந்தனைகளை ஏற்றால் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

Don't listen to Vetrivel MLA: Says MP Vaithilingam

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் கூறுகையில்,

ஓ.பி.எஸ்ஸுடன் மறைமுக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. அவருடன் இன்னும் பேச்சுவார்த்தையே துவங்கவில்லை. வெற்றிவேல் எம்.எல்.ஏ. சொல்வதை யாரும் ஏற்க வேண்டாம். அவர் கூறுவதில் எந்த அதிகாரமும் இல்லை.

நாங்கள் சொல்வது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK MP Vaithilingam has asked the people not to listen to Vetrivel MLA as it is of no importance.
Please Wait while comments are loading...