For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் வாக்கின் மதிப்பு ரூ. 87,000... அதை 500, 1000க்கு விற்காதீர்..: ‘கலாம் கட்சி’ பொன்ராஜ்

Google Oneindia Tamil News

மதுரை: வாக்காளர்கள் ஒவ்வொருவரின் வாக்கின் மதிப்பும் ரூ. 87 ஆயிரம், அதனை ரூ.500, ரூ. 1000 பெற்றுக்கொண்டு விற்று விடாதீர்கள். அதுவே எங்கள் கட்சியின் கொள்கை என அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், கடந்தமாதம் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியினைத் தொடங்கினார். வரும் சட்டசபைத் தேர்தலிலும் இக்கட்சி களமிறங்குகிறது.

இந்நிலையில், நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பொன்ராஜ். அப்போது அவர் கூறியதாவது:-

சுத்தமான குடிநீர் இல்லை...

சுத்தமான குடிநீர் இல்லை...

வாட்டர் எய்டு குளோபல் அறிக்கையின்படி, தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 15,384 பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதை மக்களுக்கு கொடுக்க தவறியது திமுக, அதிமுக மற்றும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜக கட்சிகளே. நநிநீரை இணைப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதுடன் சரி.

மொத்த செலவு...

மொத்த செலவு...

அரசியல்வாதிகள் ஏமாற்றிய தால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு குடும்பம் சுத்தமான குடிநீருக்காக ஒரு நாளைக்கு ரூ. 48.45 செலவிட வேண்டியுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளில் மொத்த செலவு ரூ.87,210 ஆகிறது.

வாக்கின் மதிப்பு....

வாக்கின் மதிப்பு....

கட்சிகள் பல வழிகளில் ஏமாற்றியுள்ளதை கணக்கீடு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படும் இழப்பு கணக்கிடப்படும். 5 ஆண்டுகளில் குடிநீருக்காக மட்டுமே இழப்பு ரூ.87,210 என்பதால் இதுவே ஒரு வாக்கின் மதிப்பு.

பணத்திற்காக விற்காதீர்...

பணத்திற்காக விற்காதீர்...

ரூ.500, ரூ. 1000-க்காக வாக்குகளை விற்றுவிடாதீர். பணம் கொடுக்க வரும் கட்சியினரிடம் அந்த தொகையை கேளுங்கள். ஆறுகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்தால் வாக்களிப்பதாகக் கூறி அனுப்பி விடுங்கள். வாக்குகளை பணத்துக்கு விற்காதீர் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை' என அவர் தெரிவித்தார்.

English summary
Abdul Kalam Vision India Party (AVIP) founder Ponraj has requested the people to not to sale the votes for money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X