வதந்திகளை நம்பாதீர்கள்... கருணாநிதி நலமுடன் உள்ளார்.. ஜெ. அன்பழகன் டிவிட்!
திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.

அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கோபாலபுரம் வீட்டிலேயே வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
துணைமுதல்வர், அதிமுக அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான திமுக தொண்டர்களும் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் எம்எல்ஏவான ஜெ.அன்பழகன் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெ. அன்பழகன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்கானிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர்.
— J Anbazhagan (@JAnbazhagan) July 26, 2018
தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications