For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்பகர்ணனை போல் தூங்காமல் உத்தரவுகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. தமிழக அரசை வெளுத்த ஹைகோர்ட்!

கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நூலகங்களில் முதல்நிலை நூலகர்களாக பணி புரிந்தவர்களை 3-ம் நிலை நூலகர்களாக மாற்றி அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து நூலகர்கள் இருவர் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

அரசின் உத்தரவு மனுதாரர்களின் பதவி உயர்வுக்கு எந்த பாதிப்பயைும் ஏற்படுத்தக்கூடாது என்றும், பதவி உயர்வுக்கான விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

நூலகர்கள் மனு

நூலகர்கள் மனு

மேலும் நூலகத்துறையில் பணியாற்றிய மணிகண்டன், அசோகன், மாதேஸ்வரன் உட்பட 4 பேரையும் கல்வித்துறைக்கு மாற்றி மாவட்ட நூலக அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரவு ரத்து

உத்தரவு ரத்து

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட நூலக அதிகாரிகளை 3-ம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்தது.

தூங்காதீங்க

தூங்காதீங்க

மேலும் 17 ஆண்டுகளுக்கு பின் தற்காலிகமாக விதிகளை வகுத்த அரசு, மனுதாரர்களுக்கு வழக்கு செலவாக ரூ.25,000 தரவும் ஹைகோர்ட் உத்தரவிட்டது. மேலும் கும்பகர்ணனை போல் தூங்காமல் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நம்புகிறோம்

நம்புகிறோம்

இனியாவது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வெளுத்தது.

English summary
Chennai high court slams Tamil Nadu govt. High court says Dont sleep like Kumbakarnan take action on court orders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X