செல்லூர் ராஜூவுக்கு நோபல் பரிசு - பரிந்துரைக்கும் டாக்டர் ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது என்று யோசனை தெரிவித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வீடு, வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், குடங்களில் சேகரித்து வைத்த தண்ணீரை அப்புறப்படுத்த சொன்ன அமைச்சர், முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளித்ததால் எந்த கொசுவும் வரல. அதுபோல நீங்களும் வீட்டு முற்றத்தில் சாணத்தை தெளியுங்கள், எந்த கொசுவும் வராது. டெங்குவும் வராது என்றார்.

இந்த யோசனையால் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் கிண்டல் கேலிக்கு உள்ளாகி வருகிறார்.சாதாரண மக்கள் கிண்டல் செய்துவந்த நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸும் கிண்டல் செய்திருக்கிறார்.

எல்லா நோபல் பரிசும் அமைச்சருக்கே

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜு - அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான் தர வேண்டும்! என்று கிண்டலடித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகருக்கு மட்டும் ஒரே ஆண்டில் 3 தீபாவளிக் கொண்டாட்டங்கள்! என்று பதிவிட்டுள்ளார் ராமாஸ்.

குளிக்கிறாங்க மக்களே!

நாமக்கல் அருகே ஆற்றுப்பாலத்தில் மலை போல் குவிந்த நுரை: செய்தி- அங்குள்ள மக்கள் அதிகமாக சோப்பு போட்டு குளிக்கிறார்கள் போலிருக்கிறது! என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.

யாரங்கே?

ஆற்றுப்பாலத்தில் மலை போல் குவிந்த நுரை: செய்தி -யாரங்கே... இதுபற்றி ஆய்வு செய்ய அமைச்சர் கருப்பணனை உடனடியாக அழைத்து வாருங்கள்!

தொப்பி போடாத எம்ஜிஆர்

எடப்பாடி பழனிச்சாமி தொப்பி போடாத எம்.ஜி.ஆர்: அமைச்சர் தங்கமணி - அமைச்சர்களுக்கு மூளை இல்லை என்பது தெரியும்....பார்வையும் இல்லையோ? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Dr. Ramadoss commented his twitter page,Minister Sellur Raju's statement.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற