அல்வா வியாபாரிகளிடம் தமிழகம் படும் பாடு- டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 50 ஆண்டுகளாக அல்வா வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு தமிழகம் படும் பாட்டைப் பாருங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் உரையை மஸ்கோத் அல்வா என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார் அது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. சட்டசபையிலும் அது குறித்து சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது.

மஸ்கோத் அல்வா தயாரிப்பில் புகழ் பெற்ற ஏரியா, தூத்துக்குடி மாவட்டம் முதலூர். ட்விட்டரில் பலரும் ஸ்டாலினை கலாய்க்கிற விதமாகவே கமெண்ட்களை பதிவிட்டனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சட்டசபையில் அல்வா விவாதத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சட்டசபையில் அல்வா

ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா - கடந்த 50 ஆண்டுகளாக அல்வா வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு தமிழகம் படும் பாட்டைப் பாருங்கள்! என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.

ஆளுநர் தலையிடுவாரா?

ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா - ஆளுனர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலினே சொல்லிட்டாரே

என்னப்பா இது? தளபதியே ஆளுநர் உரை இனிப்பா இருக்குன்னு சொல்றாரு என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

எப்ப எங்க கிடைக்கும்

ஆளுநர் எப்போ அல்வா கொடுப்பாரு. சுகர் இல்லாத டீ எப்போ வரும் .கேன்டின்ல எப்போ போண்டா போடுவாங்கனு ஒரு டேட்டாபேஸ் போட்டு வைச்சிருக்கேன் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pattali Makkal katci leader Dr Ramadoss has slamed tamilNadu assebly halwa debate. MLAs discussion about sweet talk about halwa in TamilNadu assembly.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற