வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது.. அமைச்சர் செல்லூர் ராஜூ அடடே ஐடியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை சோலை அழகுபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா என வீடு வீடாக அமைச்சர் ஆய்வு செய்தார்.

Dung prevents dengue fever: Minister Sellur Raju

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாசலில் கிருமி நாசினியான சாணத்தை தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராது என கூறினார். பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட சானம் தெளிக்கும் முறையை அதற்கான வசதியுள்ள மக்கள் இன்றும் பின்பற்ற வேண்டும் என்றார்.

சாணம் தெளிப்பதன் வீட்டில் கிருமிகளை அண்டவிடாமல் தடுக்கலாம் என்றும் அவர் கூறினார். பங்களா வீடுகளில் இதனை பின்பற்ற முடியாது என்ற அவர் கிராமப்புற மக்கள் இந்த முறையை பின்பற்றலாம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister sellur Raju said that if we pour dung water in front of gate it will prevent dengue in house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற