இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் : பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளுக்கு மோடி, பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்தியப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
அன்பின் மகத்துவத்தை உணர்த்திய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்த்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஈஸ்டர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுவதை அடுத்து, இந்தியப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
Happy Easter! I hope this special day strengthens the bonds of unity, peace and brotherhood. May the noble thoughts and ideals of Lord Christ motivate people to serve and bring a positive difference to society.
— Narendra Modi (@narendramodi) April 1, 2018
இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்த நன்னாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும் சகோதரத்துவமும் தழைத்தோங்கிட, இயேசு கிறிஸ்து போதித்த நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு, மனிதநேயம் கொண்டவர்களாக இந்த சமூகத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று தனது ஈஸ்டர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில், அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் நல்வாழ்த்துகள்.இந்த நன்னாளில், இயேசுபிரான் போதித்த அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மையை பின்பற்றி நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications