For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எபோலா: பாதிப்பு, புகார், சந்தேகம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எபோலா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. அப்படி யாருக்காவது இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் எபோலா பல்வேறு நாடுகளுக்கும் தற்போது பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒருவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று பீதி கிளம்பியது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு எபோலா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Ebola virus: doubts will be clarified in this number…

ஆனால் அவரை பரிசோதித்த சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள், எபோலா வைரஸ் பாதிப்பு அவருக்கு இல்லை என்று உறுதி செய்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளது. எபோலா வைரஸ் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் எபோலா வைரஸ் குறித்த பாதிப்புகள் எங்கும் இல்லை. எனினும் இது தொடர்பான புகார்களுக்கு பொதுசுகாதாரத் துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 044-2345 0496, 044-2433 4811 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினர்.

English summary
If anyone having doubt about Ebola virus, they can call to the toll free numbers and clarify that in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X