For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. ராமதாஸ் ஆவேசம்!

லஞ்சத்தின் அடையாளமாக திகழும் எடப்பாடி அரசு இனியும் நீடிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: லஞ்சத்தின் அடையாளமாக திகழும் எடப்பாடி அரசு இனியும் நீடிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். லஞ்சம் கொடுத்த வாங்கிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக மற்றும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பு ஆட்சியமைக்க கோடி கணக்கில் பணம் பெற்றது குறித்து மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ தனிப்பட்ட வீடியோ காட்சி நேற்றிரவு வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இதுவே விவாத பொருளாக பயன்பட்டது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மறுத்துள்ளனர்.

டீவிட்டிய ராமதாஸ்

டீவிட்டிய ராமதாஸ்

ஊழல் செய்து ஆட்சியமைத்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இனியும் நீடிக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த அரசு நீடிக்கக்கூடாது

இந்த அரசு நீடிக்கக்கூடாது

அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு லஞ்சத்தின் அடையாளமாக திகழ்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசு இனியும் நீடிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்ய வேண்டும்

லஞ்சம் கொடுத்த,வாங்கிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு 100க்கும் மேபட்டோர் லைக் செய்துள்ளனர்.

டிவிட்டரில் சவுக்கடி..

டிவிட்டரில் சவுக்கடி..

வழக்கமாகவே மற்ற தலைவர்களை காட்டிலும் தமிழக அரசியல் நிகழ்வுகளையும் சமூக நிகழ்வுகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு சவுக்கடி கொடுத்து வருபவர் ராமதாஸ். இந்நிலையில் இந்திய அரசியலை அதிர வைத்த தமிழக எம்எல்ஏக்கள் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராமதாஸ்.

English summary
PMK founder Ramadoss urges in his twitter page that Edappadi govt is icon of bribe. He said this govt should not continue anymore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X