For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை: முதல்வர் அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர் நிலுவைத்தொகை ரூ.750 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.

சட்டசபையில் விதி எண் 110ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து கழக நிதி நிலையை சரி செய்ய யுக்திகளை கடைபிடிப்பதோடு, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகையை அரசு மானியமாக வழங்கியது. பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து கட்டணத்தை குறைந்த அளவிலேயே வைத்துள்ளது. போக்குவரத்து துறை நஷ்டத்தை போக்க ரூ.5138.5 கோடி அளவுக்கு ஜெ. அரசு நிதி ஒதுக்கியது.

Edappadi Palaniswamy announced retired transport department employee will get Rs 750 crore

போக்குவரத்து கழகத்தில் 30.12.2017 வரையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இப்போது அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து போக்குவரத்து கழக ஓய்வூதிய பலன்களாக 2143 கோடி அளவுக்கு வழங்கியுள்ளது.

எனவே போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை பலவற்றை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிஐடியூ அமைப்பின் சவுந்திரராஜன் இதுகுறித்து கூறுகையில், முதல்வர் அறிவிப்பில் எதுவும் விஷேசம் இல்லை. எங்களிடமிருந்து ஆண்டுக்கணக்கில் கையாடல் செய்து வைத்த பணத்தைதான் அரசு திரும்ப வழங்குகிறது. இது ஊழியர்கள் பணம்தான். ஏதோ அவர்கள் பணத்தை தூக்கி தருவதை போல மக்களிடம் காட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Chief Minister Edappadi Palaniswamy announced today that the retired transport department employee will get pay Rs 750 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X