கிழக்கு திசை காற்று... கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் மழை- தமிழ்நாடு வெதர்மேன்
கிழக்கு திசையில் இருந்து காற்று வீச உள்ளதால் சென்னையில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: கிழக்கு திசையில் இருந்து காற்று கிளம்பவுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் 24ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை காலமான நவம்பரில் சென்னையில் மழை பெய்தது. டிசம்பரில் சரியான மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளம் வரும் அளவுக்கு கனமழை பெய்யாது,மழையை அனுபவியுங்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்லும்போது, மறக்காமல் ரெயின் கோட், அல்லது குடையை உடன் எடுத்துச் செல்லவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நமக்கு மழை கண்டிப்பாக இருக்கும். வங்காள விரிகுடா கடலில் எந்தவிதமான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கும் இப்போது வாய்ப்பு இல்லை. ஆதலால், இந்த மழையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகும் மழை என நினைக்க வேண்டாம்.

கடற்கரை பகுதிகளில் மழை
இந்த மழையானது கிழக்கில் இருந்து வரும் காற்றால் உருவாகும் மழையாகும். இன்று முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் மழை இருக்கும். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் இன்றிலிருந்தே மழை தொடங்கிவிடும். உள் மாவட்டங்களில் ஒரு நாள் மட்டுமே மழை இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் கடற்கரை பகுதிகளிலேயே அதிகமான மழை இருக்கும்.

ரெயின்கோட் அவசியம்
சென்னையைப் பொருத்தவரை குறைந்தபட்சம் 2 நாட்களுக்காவது மழை பெய்யக்கூடும். ஆனால், கனமழைக்கோ, மிக கனமழைக்கோ வாய்ப்பு இல்லை. மழையை அனுபவியுங்கள். அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் வெளியே செல்லும்போது, மறக்காமல் ரெயின் கோட், அல்லது குடையை உடன் எடுத்துச் செல்லவும். இவ்வாறு அவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

மார்கழியில் மழை
சென்னையில் நேற்று காலை முதல் லேசான மழை பெய்தது. பல பகுதிகளில் அங்காங்கே மழையும் தூறியது. இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மார்கழி மாத குளிரோடு மழையும் சேர்ந்து கொண்டது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications