திருவாரூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் அருகே மணலகரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி கலியபெருமாள் உயிரிழந்தார்.

வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர் என கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. திருவாரூரில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன.

Farmer electrocuted near Thiruvarur

திருவாரூர் அருகே மணலகரம் கிராமத்தில் கலியபெருமாள் என்கிற விவசாயி வயலில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றச் சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A farmer Kalaiyaperumal was electrocuted near Thiruvarur.
Please Wait while comments are loading...