For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மூலிகைகள் நாசம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து காட்டு தீ பரவி வருகிறது. இதை வனத்துறையினர் போராடி கொஞ்சம கொஞ்சமாக அணைத்து வருகின்றனர்.

கடையம் அருகே உள்ள மாதாபுரம் ஜெபமலை பின்பகுதியான குத்தாலம்பறவை மலை பகுதியில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த மலை பகுதியில் மிளா, கரடி, முயல், காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அரிய வகை மூலிகைகளும் நிறைந்துள்ளன. காற்றின் வேகம் மேற்கிலிருந்து கிழக்கு இருந்ததால் தீ கொளுதது விடடு எரிய தொடங்கியது. இதை பார்த்து திடுககிட்ட பொதுமக்கள் கடையம் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Chennai-Kuwait flight cancelled; 245 passengers ready to board

கடையம் வனச்சரகர் இளங்கோ உத்தரவின் பேரில் கோவிந்தபேரி பீட் வனக்காப்பாளர் பூல்பாண்டியன், கடையம் பீட் வனகாப்பாளர் ஆறுமுகம் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சமூக வனத்துறை வனவர் செல்வராஜ் ஆகிய 11 பேர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எதிர் தீ மூட்ட வழி இல்லாததால் மரத்தின் கொப்புகளை வெட்டி, விடிய விடிய போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீ பிடிப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Fire broke out in the western ghat area in Tirunelveli district. As a result trees and animals are affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X