For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரம்: ஐந்து அதிமுக எம்.பிக்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்களா?

By BBC News தமிழ்
|

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர் - காவிரி விவகாரம்: ஐந்து அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா?

காவிரி
Getty Images
காவிரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது, ஆளும் கட்சியான அதிமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த ஐந்து எம்.பிக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் பழனிசாமியை சந்தித்து கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவிரி மேலான்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.பிக்கள் குமார், அருண்மொழி, ஹரி, நாகராஜன் மற்றும் அன்வர்ராஜா ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், திமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்வது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசிக்கப்பட உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக தினமலர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்

கார்டூன்
DINAMALAR
கார்டூன்

தினமணி - ஃபேஸ்புக்கிடம் விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசு

தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் அளிக்கும் விளக்கங்களை பொருத்துதே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற போது, இங்குள்ள ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்று கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், இதே போன்று பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்படுகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் இதற்கு விளக்கம் அளித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் என ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாக விவரிக்கிறது அச்செய்தி.

தி இந்து - திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார் மம்தா

மேற்கு வங்க முதலமைச்சரும் மற்றும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பேனர்ஜி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆகிய இருவரையும் சந்திக்க உள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தமிழகத்திற்கு வருகை தரும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்.பிக்கள் குமார், அருண்மொழி, ஹரி, நாகராஜன் மற்றும் அன்வர்ராஜா ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X