திறந்துவிடப்படும் மதுராந்தரம் ஏரி... 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் அங்குள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 45- இல் இருப்பது மதுராந்தகம் ஏரி. இது மிகப் பெரிய ஏரியாகும். இதன் கொள்ளளவு 23.30 அடியாகும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இதன் நீர் மட்டம 20.50 அடியாக உள்ளது.

Flood warning for 21 villages in Kanchipuram

இதனால் மதுராந்தகம் ஏரியிலிருந்து கிளியாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து அங்கு வலது கரை, இடது கரையோரங்களில் உள்ள குன்னத்தூர், மலையப்பாளையம், தோட்ட நாவல், கே.கே.புதூர், விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், நீலமங்கலம், கத்திரிசேரி, வீராணகுண்ணம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் 10,000 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளன. மேலும் இந்த ஏரி ஆபத்தான பகுதியாக உள்ளதால் இங்கு குளிப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தாம்பரத்தில் வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பழகன் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து கூறினார். மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் ரூ.800 கோடியில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Anbalagan says that flood warning given for 21 villages in kanchipuram, as Maduranthagam lake is getting filled fast.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற