திருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ.. தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ-வீடியோ

  திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பர்வத மலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இந்நிலையில் இந்தப் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

  Forest fire in Parvatha mountain at Thiruvannamalai

  நூற்றுக்கணக்கான ஏக்கரில் மூலிகைச் செடிகள் எரிந்து வருகின்றன. காற்றின் வேகத்தால் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

  இதைத்தொடர்ந்து தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். அண்மையில் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி ட்ரெக்கிங் சென்ற 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

  Forest fire in Parvatha mountain at Thiruvannamalai

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Forest fire in Parvatha mountain at Thiruvannamalai. Forest department tries to douse the fire.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற