'சின்னம்மாவின் குரல் இனிமையாக இருக்கும்' ...சிலிர்த்த வளர்மதிக்கு "பரிசு"!!
"சின்னம்மா"வின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: "சின்னம்மா"வின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து தள்ளிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பரிசு வழங்கியுள்ளது தமிழக அரசு. அவர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த 31ஆம் தேதி பதவியேற்றார். அதுவரை அவர் வெளியுலகில் பேசாமல் இருந்ததால் அவரது குரலைக் கேட்க மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

அப்போது பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சசிகலாவின் குரல் இனிமையாக இருக்கும் என புகழ்ந்து தள்ளினார். இதையடுத்து அவருக்கு அதிமுக அரசு சார்பில் "பரிசு" வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
அவரது நியமனம் தொடர்பான விதிமுறைகள் பின்னர் தனியாக பிறப்பிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது இலக்கிய அணி செயலாளராக உள்ள பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்துடன் சசிகலாவை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications