For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதி முழுவதும் சரிந்து விழுந்தது

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரை தளத்தில் தீ பற்றி எரிந்து வருவதால் கட்டடத்தின் முன்பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அதன் முன்பகுதி இடிந்து விழுந்தது. இதனால் எஞ்சியுள்ள கட்டடம் இடியும் அபாயத்தில் உள்ளது.

தி நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.

Front view of Chennai silks collapsed

எனினும் கடையின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. இதனால் கடையின் சுவர்களுக்கு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உள்அலங்காரங்கள் உருகி பிளாஸ்டிக் குழம்புகள் வெளியேறின. மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது.

புகையை உறிஞ்சும் கருவி, நுரையை பீய்ச்சி அடிக்கும் கருவி ஆகியன வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் அருகே உள்ள பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விதிமீறல் மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கட்டடத்தின் 7-ஆவது மாடியிலிருந்து 2-ஆவது மாடி வரை சீட்டுக் கட்டுபோல் சரிந்து விழுந்தன.

இந்நிலையில் 2-ஆவது நாளாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் ஹைட்ராலிக் இயந்திரம் கொண்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரை தளத்தில் மீண்டும் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் கட்டடத்தின் முன்பகுதி சரிந்து விழுந்தது.

English summary
Again fire in Ground Floor of Chennai Silks, the front view of the building collapsed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X