For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கவுண்டர்" அன்னிக்கே சொல்லிட்டார்.. யாராச்சும் கேக்குறீங்களாப்பா...!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: குடியை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தமிழகத்தில் திடீரென கோஷங்கள் விண்ணை முட்ட ஆரம்பித்துள்ளன. குடி குடியை கெடுக்கும் என்ற லேபில் ஒட்டிய பாட்டிலை வாங்கிதான் குடிகாரர்களும் குடித்துக்கொண்டு உள்ளனர்.

மதுவிலக்கு கொண்டுவருவோம் என்கிறது திமுக, முதலில் திமுகவினர் நடத்தும், மதுபான ஆலைகளை மூடுங்கள் என்கிறது அதிமுக. சிகரெட் கம்பெனி ஏஜென்சிதான் மகன் நடத்துகிறான், அது ஒன்றும் மதுபானம் போல தீங்கானது இல்லை என்கிறார் மதுவிலக்கு போராளியாக மாறிய வைகோ.

Gaundmani gives idea for banning liquor

ஆனால், பல வருடங்கள் முன்பு வந்த திரைப்படம் ஒன்றில் கவுண்டமணி சொன்ன ஒரு ஐடியா, இக்காலத்திற்கு எப்படி பொருந்திப்போகிறது பாருங்கள்.

அந்த திரைப்பட காட்சியில், வினுசக்கரவர்த்தியும், கவுண்டமணியும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.

வினுசக்கரவர்த்தி: ஏம்ப்பா, குடிச்சிட்டு இந்த கூத்தடிக்கிறானுங்களே. குடிய ஒழிக்க வேற வழியே இல்லையா?

கவுண்டமணி: நாட்ல குடிய தயார் பண்றதே 8 கம்பெனிதான் இருக்கு. குடிக்காதங்கன்னு பிரச்சாரம் பண்றவங்க, அந்த 8 கம்பெனிக்கும் போன் பண்ணி இத தயார் பண்ணாதீங்கன்னு சொல்லிறலாம். அதவிட்டுட்டு 80 கோடி ஜனங்ககிட்டபோய் தனித்தனியா, குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு கெஞ்சுனா எப்படீங்க நடக்கும்.

இப்படி ஒரு டயலாக் உள்ள இந்த வீடியோதான் தற்போது வாட்ஸ்அப்பில் ஹாட்-கேக் போல பரிமாறப்பட்டு வருகிறது. கவுண்டர், மஹான்தான்யா..

English summary
Actor Gaundmani gave an idea for banning liquor from this country in a film which is now sharing by whatsapp users.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X