கொடநாடு பங்களாவில் கொலை நடப்பதற்கு முன் ஆவி விரட்டும் பூஜை நடந்துச்சாமே?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை நடப்பதற்கு சில வாரங்களுக்கு கெட்ட ஆவிகளை விரட்டும் பூஜை நடந்ததாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து அனைத்து சொத்துக்களும் சசிகலா வசம் வந்தது.

கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் காவலாளி கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடினர்.

டிரைவர் கனகராஜ்

டிரைவர் கனகராஜ்

கொலை, கொள்ளை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட காவலாளி கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். அதே நாளில் கனகராஜின் நண்பர் சயான் விபத்தில் சிக்கினார். மனைவி குழந்தைகள் உயிரிழந்தனர்.

சயான் கைது

சயான் கைது

சிகிச்சை பெற்று வந்த சாயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் இதுவரை 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாமீன் கேட்ட நால்வர்

ஜாமீன் கேட்ட நால்வர்

கைது செய்யப்பட்டவர்களில் ஜம்ஷேர் அலி, ஜிதின் ஜாய், மனோஜ், சந்தோஷ் ஆகிய நால்வரும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட நீதிபதி வடமலை தள்ளுபடி செய்தார்.

ஆவி பூஜை

ஆவி பூஜை

ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப மனுவில், மனோஜ், ஜிதின் ஜாய் ஆகியோர் கேரளாவில் மாந்ரீக பூஜை செய்பவர்களாம். கொடநாடு பங்களாவில் கொலை நடப்பதற்கு முன்பாகவே கெட்ட ஆவியை விரட்டுவதற்காக பூஜை செய்ய அழைத்து வந்தார்களாம்.

தவறுதலாக கைது

தவறுதலாக கைது

எஸ்டேட் பங்களாவிற்கு வந்து சென்றவர்களின் பெயர்களை சேகரித்த போது சில வாரங்களுக்கு முன்பு வந்து சென்ற தங்களை தவறுதலாக குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து விட்டனர் என்றும், தங்களுக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எந்த ஆவியை விரட்ட பூஜை

எந்த ஆவியை விரட்ட பூஜை

ஜெயலலிதாவிற்கு பிடித்தமான பங்களாவான கொடநாடு பங்களாவில் அவரது ஆவி சுற்றி வருகிறது என்று பங்களா காவலாளிகள் கூறியதை அடுத்து கேரளா மந்திரவாதிகளை வந்து பூஜை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

பணம், நகை, ஆவணங்கள்

பணம், நகை, ஆவணங்கள்

பங்களாவில் பணம், நகை, ஆவணங்கள் இருந்த அறைகளில் ஜெயலலிதாவின் அறையும் ஒன்று. அந்த அறையை பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம். முக்கிய குற்றவாளிகள் வெளியில்தான் சுற்றிக்கொண்டுள்ளனர் என்றும் பங்களா காவலாளிகள் கூறி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jayalalithaa's Kodanad estate security Om Bahadur murder on April 23. Manoj and Jithin told their bail petion, before murder Pooja performs at kodanad estate.
Please Wait while comments are loading...