For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார் கிரிஜா வைத்தியநாதன்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தயநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிர் அவர் பொறுப்பேற்ற அவருக்கு அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் தலைமைச் செயலாளராக நீடிக்க எதிர்ப்பு கிளம்பியது.

Girija Vaithiyanathan take charge TN Chief secretary

ராமமோகனராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து அவர் 40 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் 45 வது மற்றும் 4வது பெண் தலைமைச் செயலாளர் ஆவார். இவர் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பொறுப்புகளை கவனிப்பார். புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிரிஜா வைத்தியநாதன் பின்னணி

01.7.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன், முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

நல்வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜா வைத்தியாநதன், நில நிர்வாகத் துறை ஆணையராக பதவி வகித்தார்.

தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

English summary
Girija Vaidyanathan today take charge chief secretary of Tamil Nadu. The government has appointed Girija Vaidyanathan as the state's chief secretary, replacing P Rama Mohana Rao, a day after the Income Tax department raided his residence, office and other properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X