For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடுமையாகப் போராடி வீழ்ந்த கோகுல இந்திரா... 19 அமைச்சர்களில் 14 பேர் வெற்றி... 5 பேர் அவுட்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட 19 அமைச்சர்களில் 14 பேர் வெற்றி பெற்று கரையேறி விட்டனர். 5 பேர் மட்டுமே தோல்வி அடைந்தனர். இதில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா கடுமையாக பைட் கொடுத்தும், அதைத் தாண்டி திமுக வெற்றி பெற்று விட்டது. வெள்ளம்தான் கோகுல இந்திராவை வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 19 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருந்தார் ஜெயலலிதா. அதில் 5 பேர் தோல்வியடைந்து விட்டனர். 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தோல்வி அடைந்தவர்களில் முக்கியமானவர் நத்தம் விஸ்வநாதன். இவர் தோற்க வேண்டும் என்றே அவருக்கு ஆத்தூர் தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல இவர் தோற்று விட்டார். அதேசமயம், தோல்வி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் சூப்பராக ஜெயித்து விட்டார்.

 தோல்வி அடைந்த முகங்கள்

தோல்வி அடைந்த முகங்கள்

ஆத்தூர்- நத்தம் விஸ்வநாதன், ஓரத்தநாடு - ஆர். வைத்திலிங்கம், ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி, அண்ணாநகர் - கோகுல இந்திரா, சங்கராபுரம் - பி.மோகன்.

1800 ஓட்டுக்களில் வீழ்ந்த கோகுல இந்திரா

1800 ஓட்டுக்களில் வீழ்ந்த கோகுல இந்திரா

இவர்களில் கோகுல இந்திரா வெறும் 1800 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடக்கது. மற்ற அமைச்சர்களைப் போல இல்லாமல் கோகுல இந்திரா மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பேஸ்புக்கில் தனி பக்கம் ஆரம்பித்து இவருக்காக ஒரு டீமே வேலை பார்த்தது.

கடும் போட்டியால் தோல்வி

கடும் போட்டியால் தோல்வி

மேலும் வெள்ள பாதிப்பின்போது தான் செய்த பணிகளை விளக்கியும், புகைப்படங்கள், வீடியோக்களைப் போட்டும் இவர் வாக்கு சேகரித்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. இருப்பினும் திமுக தரப்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட்டதால் மயிரிழையில் கோகுல இந்திரா தோல்வியைத் தழுவ நேரிட்டது.

வென்ற முகங்கள்

வென்ற முகங்கள்

போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி - எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மேற்கு - செல்லூர் ராஜு, குமாரபாளையம்- பி. தங்கமணி, தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயக்குமார் - திருமங்கலம், கே.டி.ராஜேந்திர பாலாஜி - சிவகாசி, கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை, பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம், நன்னிலம் - காமராஜ், கடலூர் - மு.சி. சம்பத், விராலி மலை - விஜயபாஸ்கர், ஸ்ரீவைகுண்டம் -எஸ்.பி. சண்முகநாதன், பாப்பிரெட்டிபட்டி - பி. பழனியப்பன்.

English summary
Among the 19 ministers who contested in the assembly elections only 5 were defeated, remaining 14 won the battle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X