இவர்களுக்கு மட்டும்தான் இனி ரேஷன் கார்டும் பொருள்களும் கிடைக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகம் இணைந்துள்ளதால் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் யாருக்கு யாருக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கும் என்கிற விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Government listed out those who are eligible for getting food supplies

விதிகள் விவரம்:

அந்தியோஜனா அன்னயோஜனா திட்டம், அன்னபூர்ணா ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், மாற்றுத் திறனாளியை குடும்பத் தலைவராக கொண்டவர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.

குடிசைவாசிகள், குப்பை சேகரிப்பாளர்கள், வீடில்லாதவர்கள் ஆகியோரும் ரேஷன் பொருள்கள் வாங்க தகுதியானவர்களாவர்.

விவசாய தொழிலாளர்களும் ரேஷன் பொருள்களை பெறலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The beneficiaries of Antyodaya Anna yojana scheme are eligible to get Civil supplies.
Please Wait while comments are loading...