அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்த வரைவாளர்... தூக்கிட்டு தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நில அளவைத் துறையில் வரைவாளராக பணியாற்றுபவர் அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரசு ஊழியர் அதிகாரியின் நெருக்கடியால் உயிரிழந்ததையடுத்து இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் அருகில் வசித்து வந்தவர், முத்துமாலை (39). நெல்லை நில அளவைத் துறையில் வரைவாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு உயர் அதிகாரிகள் டார்ச்சர் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே முத்துமாலை மனஉளைச்சலில் இருநத்தாக தெரிகிறது.

Government staff committed suicide at Thirunelveli due to stress

நேற்று வழக்கம் போல பணி முடிந்த வீடு திரும்பியவர் யாரிடமும் பேசாமல் இருக்கமான முகத்துடனே காண்ணப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருடைய வீட்டில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் முத்துமாலை உடல் மீட்கப்பட்டது. மன உளைச்சல் காரணமாக முத்துமாலை உயிரிழந்தாரா என்று பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Government staff commited suicide at Thirunelveli because of higher officials torture and in the stress he self hanged himself, Police investigating the cause of death.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற