For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரின் செயலை விமர்சித்தால் நடவடிக்கை.. நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மாளிகை விளக்கம்

மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மளிகை விளக்கம் அளித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது, ஆளுநரின் செயலை விமர்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மளிகை விளக்கம் அளித்துள்ளது.

நாமக்கல்லுக்கு ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை எறிந்தும் போராடினர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Governor gives explanation on his visit to Namakkal

இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை. இது தமிழக அரசுக்கு எதிரான ஆய்வு கிடையாது.

அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த துறையின் செயல்பாட்டையும் ஆளுநர் விமர்சித்ததில்லை.

அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும்.எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று ஆளுநர் மளிகை விளக்கம் அளித்துள்ளது.

English summary
Governor gives an explanation on his visit to Namakkal says that he has rights to visit to any place and investigate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X