எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அரசு? - தற்காலிக நடத்துனர், ஓட்டுனர்களுக்கு அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

  திருச்சி: அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகம் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்து வருகிறது.

  ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கியது.

  Govt started recruiting temporary drivers and conductors

  சென்னையில் நேற்று 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடித்தது.

  இதன் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தேவை என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மேலும் எரிச்சலடைய செய்துள்ளது.

  இதுகுறித்து கவலைப்படாத போக்குவரத்து கழகம், தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமித்து வருவதாக கூறப்படுகிறது.

  தற்காலிக ஓட்டுனர்கள் எந்த அளவு பயிற்சி பெற்றவர்கள் என்று தெரியாத நிலையில் போக்குவரத்து கழகம் எங்களை ஒடுக்குவதாக நினைத்து பெரும் ஆபத்தான முடிவை எடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Govt started recruiting temporary drivers and conductors. And the Drivers and conductors are opposing this step of the government and warns that it will create more agitation

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற