For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா போய்த் திரும்பிய 2 பெண்கள் பறவை காய்ச்சலால் பலி.. தடுப்பு நடவடிக்கை இல்லை என புகார்

கேரள மாநிலத்ததுகு சுற்றுலா சென்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பறவைக்காய்ச்சலால் பாதிப்பட்டு உயிரிழந்தனர். இரு மாநில எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததே இதற்கு காரண என குற்றச்சாட்டு எழுந்த

Google Oneindia Tamil News

நெல்லை: கேரள மாநிலத்துக்கு சுற்றுலா சென்று வந்தவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து பரவும் பறவைக் காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் முழுவதும் சுற்றுலா சென்று திரும்பினர். அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

Govt to take action to stop in bird flu in Tamilnadu: Public

இதில் நாகம்மாள் என்பவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு பறவை காய்ச்சல் தாக்கியுள்ளதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கினர்.
இந்நிலையில் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அதிகாலை அவர் இறந்தார்.

இதேபோல், விஜயலட்சுமி என்பவரை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பறவை காய்ச்சல் தாக்கியதை உறுதிப்படுத்தினர். நேற்று அதிகாலை அவர் இறந்தார். கேரளாவுக்கு சுற்றுலா சென்று வந்த 22 பேரில், இரண்டு பேர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததால், மற்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அதனால் இங்கு மருத்துவர்கள் இல்லாமல் சில பணியாளர் மட்டுமே தடுப்பு மருந்துக்களை தெளித்து வரும் நிலையில் கூடுதல் சுகாதார பணியாளர்களைக் நியமித்து சுகாதாரத் துறையினர் விரைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இருமாநில எல்லையோர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Two people died in Tamil nadu due to bird flu who had gone to Kerala for tour. The people who are all belongs to border of Nellai they are urging Tamilnadu government to take action to stop the flu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X