ஜி.எஸ்.டி. சந்தேகங்களை விளக்குவதற்கு தமிழக அரசு இன்று கருத்தரங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கருத்தரங்கை இன்று நடத்துகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி.) நாடு முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

GST conference today in Chennai

இந்த கருத்தரங்கம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது. கருத்தரங்கை நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்து பேசுகிறார்.

வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றுகிறார். கருத்தரங்கில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி குறித்த சிறப்பம்சங்கள் மற்றும் சுங்கவரி சட்டத்தின் கீழ் உள்ள திருத்தங்கள் ஆகியவை வணிகர்களுக்கு காணொலி விளக்கவுரை மூலம் எடுத்துரைக்கப்பட உள்ளது.

எனவே, வணிகப்பெருமக்கள் அதிகளஅவில் கலந்துகொண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் குறித்த விளக்கங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Govt organised a conference for GST on Wednesday.
Please Wait while comments are loading...