ஜிஎஸ்டி எதிரொலி.. தியேட்டர் பக்கம் ரசிகர்கள் திரும்பிக் கூட பார்க்காத நிலை ஏற்படும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் சினிமா துறையை அது பெரிய அளவில் பாதிக்கும். காரணம், இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்.

நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பல்வேறு பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் தப்பவில்லை.

ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால்...

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால்...

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பால் விலை, காய்கறி விலை உள்ளிட்டவை தானாக உயர்ந்து அது அடித்தட்டு, நடுத்தர மக்களை பாதிக்கும். அதுபோல்தான் தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும் பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும்.

சென்னையில்...

சென்னையில்...

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தியேட்டர்கள், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றில் ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.40 , ரூ. 50 கட்டணங்களில் படம் பார்த்த மக்களுக்கு இந்த தியேட்டர் கட்டணமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தியேட்டருக்கு அவர்கள் விற்கும் உணவு பண்டங்களை மட்டுமே வாங்க வேண்டும். வெளியில் இருந்து கொண்டு வரும் பொருள்களுக்கு அனுமதியில்லை. இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதித்தது.

ஜிஎஸ்டியால்...

ஜிஎஸ்டியால்...

ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், வாகன வாடகை, உணவு பொருள்களின் விலை கடுமையாக உயரப் போகிறது. ஏற்கெனவே மாத பட்ஜெட்டில் துண்டு விழும் நிலையில் உள்ள மக்களுக்கு தியேட்டருக்குப் போகும் ஆர்வம் அடியோடு குறையும். குடும்பத்தோடு போனால் பர்ஸ் தாங்காது என்பதால், திருட்டு விசிடி அதிகரிக்கும். ஆன்லைனில் படம் பார்ப்பதும் அதிகரிக்கும்.

சினிமா துறை பாதிக்கும்

சினிமா துறை பாதிக்கும்

முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிவிடும். ஆனால் மக்கள் தியேட்டருக்கு வரவில்லையெனில் வளர்ந்து வரும், புதுமுக நடிகர்களின் படங்கள் பாதிக்கப்படும். மக்கள் தியேட்டருக்குபோய் படம் பார்க்கும் நிலை குறைந்து வரும் நிலையில் ஜிஎஸ்டியால் அதுமேலும் குறைய வாய்ப்புகள் உண்டு. இதனால் திரைத் துறையின் பல பிரிவுகளும் கடும் பாதிப்பை சந்திக்கும்.

கமல் எதிர்ப்பு

கமல் எதிர்ப்பு

தியேட்டர் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி விதிப்பு குறித்து தகவல்கள் வெளியான போதே நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்தார். இது திரைத்துறையினரை கடுமையாக பாதிக்கும் என்பதால் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST implemented from yesterday midnight. GST on theatre charge will give impact on cine field.
Please Wait while comments are loading...