தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான்.. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எச் ராஜா வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி

  சென்னை: நடிகர் ரஜினிக்காந்தின் ஆன்மீக அரசியலுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

  நடிகர் ரஜினிக்காந்த் தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தனது அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்தார்.

  வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்த அவர் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்ல உள்ளதாக கூறினார்.

  எதிர்ப்பும் வரவேற்பும்

  எதிர்ப்பும் வரவேற்பும்

  நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி பாலிவுட் நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  ஆன்மீக பூமிதான்

  ஆன்மீக பூமிதான்

  இந்நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து பாஜக தேசிய தலைவர் எச் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான் என கூறியுள்ளார்.

  ஆங்கிலேய அடிவருடிகள்

  ஆங்கிலேய அடிவருடிகள்

  ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த மண் என தெரிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் இந்து விரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து என்றும் எச் ராஜா கூறியுள்ளார்.

  ஆன்மீக அரசியலுக்கு பாராட்டு

  ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது என்றும் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  H Raja praising Rajini's devotional politics. He say TamilNau is always a devotional state.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X