அப்போது எங்கே போயிருந்தார் பாரதிராஜா? எச். ராஜா கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்மால் இந்தியா துண்டாடப்படுமோ என அச்சம் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவை எச். ராஜா விமர்சித்தது குறித்து பாரதிராஜா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எச். ராஜாவால் இந்தியா துண்டாடப்படுமோ என அச்சம் தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

H Raja slams Director Bharathiraja

இதனை சுட்டிக்காட்டி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:

இன்று பாரதிராஜா அவர்கள் எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்று அச்சம் தெரிவித்து உள்ளார்

ஒவைசி அவர்கள் 15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள் .80% இந்துக்களை கொன்று குவிப்பேன் என்று சொன்ன போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

அஜ்மல் கசாப்,அப்சல் குரு போன்றவர்கள் இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

காஷ்மீரில் பல இந்துக்கோவில் இடிக்கப்பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்கள் விரட்ட பட்ட போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

வங்கதேச அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் பூர்விக போடோ குடிமக்களை விரட்டிய போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

காங்கிரஸ் கட்சி மதக்கலவர தடுப்பு மசோதா கொண்டு வர முயற்சித்த போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

கேரளாவில் லவ் ஜிஹாத் நடக்கும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மிருகங்களால் கொல்லப்பட்டும் போது பாரதி ராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை

அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்..

இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP National Secretary H Raja slammed that Director Bharathiraja on Vairamuthu row.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற