நாங்களே உதவினாலும் உங்க படம் ஓடாது... உதயநிதி ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் உதயநிதி ஸ்டாலினும், எச்.ராஜாவும் புதுத் திரைப்படம் ஒன்று தொடர்பாக விவாதத்திற்கு காரணமாகியுள்ளனர்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் இப்படை வெல்லும். இந்தப் படம் இந்த மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாம். இதன் டிரெய்லர் காட்சிகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், உதயநிதி கூறுகையில் மெர்சல் படத்துக்கு முழு புரமோஷன் செய்தது பாஜக. அதுபோல் என்னுடைய இப்படை வெல்லும் படத்துக்கும் எச்.ராஜாவையும், தமிழிசையையும் பேச வைக்கலாம்னு நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

H Raja teasing Udayanidhi Stalin

இதற்கு டிவிட்டரில் பதிலடியாக எச்.ராஜா ஒரு கருத்தை கூறியுள்ளார். "ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்" என்று கூறிுள்ளார்.

அதாவது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்கள் எப்படி ப்ரமோஷன் செய்தாலும் ஓடாது என்று எச்.ராஜா கேலி செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
H Raja teasing Udayanidhi Stalin over new film promotion.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற