அய்யாகண்ணுவை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ மீது பாயும் எச்.ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்த பாஜக பெண் நிர்வாகி- வீடியோ

  சென்னை: கோயில் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக எம்எல்ஏ மீது சாடியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

  இதுகுறித்து எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டில், "திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு அஇஅதிமுக எம்.எல்.ஏ எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது. அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

  H.Raja urging action against AIADMK MLA

  பெரியார் சிலை அகற்றப்பட வேண்டும் என்று எச்.ராஜா 'அட்மின்' பேஸ்புக்கில் வெளியிட்ட தகவலால் கோபமடைந்த அமைச்சர்கள் சிலர் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ மீது சீறியுள்ளார் எச்.ராஜா.

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் துண்டு பிரசுரம் வினியோகித்த விவசாய அமைப்பை சேர்ந்த தலைவரான அய்யாகண்ணு மீது நடவடிக்கை எடுக்க எச்.ராஜா வலியுறுத்தியிருந்தார். இப்போது அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

  கோயில் தொடர்பான விவகாரங்களில் சுப்பிரமணியன் சுவாமி போல இவர் கருத்துக்களை தெரிவித்து வருவது கவனிக்கததக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  H.Raja urged the AIADMK to take action against it's MLA.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற