கட்டிய வேட்டியை கழட்டிவிட்டு கோவணத்தோட நின்னானாம்.. ஆரவ் குறித்து நடிகை ஆர்த்தி அதிரடி டிவிட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டிய வேட்டியை கழட்டிவிட்டு கோவணத்தோட நின்னானாம் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரவ் குறித்து நடிகை குண்டு ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியா மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளார். இதனால் கடந்த 3 வாரங்களாக சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டும் மக்கள் வாக்களித்து அவரை காப்பாற்றி வருகின்றனர்.

அன்புக்காக ஏங்கும் ஓவியா ஆறுதலாக பேசும் ஆரவை காதலிப்பதாக கூறினார். ஓவியாவிடம் கடலை போட்டு வரும் ஆரவ் அவரை காதலிக்கவில்லை எனக்கூறி நண்பர்களாக இருப்போம் என்றார்.

ஓவியாவிடம் நெருக்கம் காட்டிய ஆரவ் ஆனாலும் அவர்கள் இருவரும் நெருங்கியே இருப்பதுப்போல் தெரிந்தது. கடந்த எபிசோடுகளில் கூட ஆரவ் ஓவியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார்.

ஐஸ்க்ரீம் ஊட்டிய ஆரவ்

ஐஸ்க்ரீம் ஊட்டிய ஆரவ்

ஆண்களின் அறையில் இருந்து ஓவியா புறப்பட முயன்ற போது இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன என பாட்டுப்பாடினார் ஆரவ். அவருக்கு ஐஸ்க்ரீம் கூட ஊட்டி விட்டார்.

பிந்துவால் வந்த மாற்றம்

பிந்துவால் வந்த மாற்றம்

அவரை உண்மை என நம்பிய ஓவியா ஆரவுக்கு வாக்களித்து மக்கள் அவரை காப்பாற்ற வேண்டும் என கேமரா முன் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் பிந்துமாதவி புதிய உறுப்பினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்பின் ஆரவ்வின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குளிர் காயும் காயத்ரி கும்பல்

குளிர் காயும் காயத்ரி கும்பல்

ஓவியா செய்வதையெல்லாம் குறையாக மற்றவர்களிடம் கூறி வருகிறார் ஆரவ். இதனை காயத்ரி, ஜூலி, ரைசா ஆகியோர் சரியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆர்த்தியின் அதிரடி டிவிட்

இந்நிலையில் ஆரவ் குறித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, கைத்தறி வேட்டி கட்டினவன் பட்டு வேட்டி கிடைக்கும்ன்னு நினைச்சு கட்டின வேட்டிய கழட்டிவிட்டு கோவணத்தோட நின்னானாம்.. புரிஞ்சவன் பிஸ்தா, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கோவணம் யாரு?

கோவணம் யாரு?

அவர் ஆரவைதான் குறிப்பிடுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. பிந்து மாதவியை பார்த்தபின் ஆரவ் ஓவியாவை கழட்டிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கோவணம் என்று ஆர்த்தி யாரை கூறுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

Bigg Boss Tamil, Aarthy gets eliminated from Bigg boss-Filmibeat Tamil
ஜூலிக்கு கொண்டாட்டம்

ஜூலிக்கு கொண்டாட்டம்

ஏற்கனவே ஜூலி, ஆரவ் மீது காதல் வந்துவிட்டதாக காயத்ரியிடம் கூறினார். இந்நிலையில் ஓவியாவை ஆரவ் ஓரங்கட்டுவதை ஜூலி ரசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aarav started to avoid Oviya after Bindhu Madhavi's arrival. Harathi tweets about Aarav behaving with oviya.
Please Wait while comments are loading...