தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது: ஹைகோர்ட்டில் அரசு வக்கீல் அதிரடி பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கிவிட்டது என்று, ஹைகோர்ட்டில் அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே திமுகவின் ஸ்டாலின் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கோடு இந்த மனு இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை நிரூபிக்கும் வரை தங்கள்மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

HC asks AG to clarify whether Tamilnadu Assembly Speaker is going to disqualify 19 AIADMK MLAs

அந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தலைமை வழக்கறிஞரைபார்த்து, தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே, நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது கால அவகாசம் தேவைப்படுகிறதா என்பது குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்து இன்று மதியம் 2.15க்குள் கோர்ட்டில் தெரிவியுங்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் பிற்பகலில் தனது பதிலை தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கிவிட்டது. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
High Court asks AG to clarify whether Tamilnadu Assembly Speaker is going to disqualify 19 AIADMK MLAs before floor test.
Please Wait while comments are loading...