"நீட்".. தமிழக கோரிக்கை ஜனாதிபதிக்குப் போகாமல் தடுத்து விட்டது பாஜக.. விஜயபாஸ்கர் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நீட் தேர்வு குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த வித மாற்றமும் இல்லை என்று பதில் அளித்தார்.

Health Minister Vijayabaskar alleges BJP government

தொடர்ந்து நடத்த விவாதத்தின் போது அமைச்சசர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலத்தின் கோரிக்கையை ஜனாதிபதியிடம் மத்திய அரசு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனால் கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களை பாதுகாப்ப உள் ஒதுக்கீடு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சட்டவல்லுநர்களிடம் ஆலோசித்து வருவதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இடையில் குறுக்கிட்டு துரைமுருகன் நீட் விவகாரத்தில் தமிழக அரசு ஏன் காலதாமதம் செய்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Health minister Vijayabaskar alleged BJP government about NEET exam in assembly session today.
Please Wait while comments are loading...