விடிய விடிய கனமழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Written By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் நேற்று பகலில் வானம் தெளிவாக இருந்தது. மாலை நேரம் நெருங்க நெருங்க அப்படியே தலைகீழானது.

chennairain

ராயபுரம், பெரம்பூர் என வடசென்னையில் வெளுத்துக் கட்டிய கனமழை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராமாவரம் என பல இடங்களில் கொட்டியது. அதேபோல் புறநகர்களில் தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களிலும் கனமழை இடைவிடாது கொட்டியது.

Heavy Rain: Chennai and 2 districts declare holiday

விடிய விடிய சென்னை மற்றும் புறநகர்களில் கொட்டிய கனமழையால் மழைநீர் பல இடங்களில் மீண்டும் தேங்கியது. தற்போதும் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Tamil Nadu government declared a holiday for all schools in Chennai, Tiruvallur and Kancheepuram districts on Monday due to the heavy rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற