பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியது- கரையை வெட்டி வெள்ள நீரை வெளியேற்ற முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?- வீடியோ

  சென்னை: சென்னை புறநகரில் பள்ளிக்கரணை அடுத்த நாராயணபுரம் ஏரி நிரம்பிவிட்டது. இதையடுத்து கரையின் ஒருபகுதியை வெட்டி வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

  சென்னை புறநகரில் சிட்லபாக்கம் ஏரி, அஸ்தினாபுரம் ஏரி, நன்மங்கலம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, நாராயணபுரம் ஏரி ஆகியவை தொடர் மழையால் நிரம்பி வருகின்றன. நாராயணபுரம் ஏரி நேற்றே நிரம்பிவிட்டது.

  நாராயணபுரம் ஏரியில் நேற்றே கரைகளில் நீர்கசிவு ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நாராயணபுரம் ஏரியை பார்வையிட்டனர். இன்று அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

  நீர் வரத்து தொடருகிறது

  நீர் வரத்து தொடருகிறது

  இந்நிலையில் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏரியின் கரையை வெட்டி வெள்ள நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

  பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

  நாராயணபுரம் ஏரி நீர் திறக்கப்பட்டால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வழியாக வேளச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கடலில் சென்று கலக்கும். இதுதான் அதன் நீர்வழித்தடம்.

  ராஜேஷ் நகர்

  ராஜேஷ் நகர்

  ஆனால் தற்போது நாராயணபுரம் ஏரியின் ஒருபுறத்தில் சுண்ணாம்பு கொளத்தூரும் மற்றொரு பகுதியில் ராஜேஷ் நகரும் இருக்கின்றன. கோவிலம்பாக்கம் ஏரி மற்றும் நாராயணபுரம் ஏரிகளுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் சுண்ணாம்பு கொளத்தூர் இருக்கிறது.

  ராஜேஷ் நகருக்கு பாதிப்பு

  ராஜேஷ் நகருக்கு பாதிப்பு

  தொடர் கனமழையால் கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாராயணபுரம் ஏரி திறக்கப்பட்டால் மறுகரையில் உள்ள ராஜேஷ் நகர், வேளச்சேரி- கிழக்கு தாம்பரம் சாலையை கடந்துதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வெள்ளநீர் செல்ல வேண்டும்.

  வேளச்சேரி சாலை

  வேளச்சேரி சாலை

  ஆனால் இந்த இடைப்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் காமாட்சி மருத்துவமனை, ஜெருசலம் பொறியியல் கல்லூரி, பாலாஜி பல் மருத்துவமனையும் இருக்கின்றன. நாராயணபுரம் ஏரி நீர் திறக்கப்பட்டால் நாம் குறிப்பிட்டுள்ள இந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்க நேரிடும். வேளச்சேரி- கிழக்கு தாம்பரம் சாலையைத் தாண்டித்தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வெள்ள நீரும் எட்ட நேரிடும். ஆகையால் இப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  According to the Officials Narayanapuram lake near Pallikaranai will open due to the heavy rain.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற