சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் 2015-ஆம் ஆண்டு போல மழை, வெள்ளம் ஏற்பட்டுமா?-வீடியோ

  சென்னை: இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலைகொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

  கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி

  வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

  உள்மாவட்டங்களில் மிதமான மழை

  உள்மாவட்டங்களில் மிதமான மழை

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்யும், ஒருசில வேளையில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

  பொன்னேரியில் அதிக மழை

  பொன்னேரியில் அதிக மழை

  கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 10 செ.மீ., கடலூர் 9 செ.மீ., ஆனைக்காரன்சத்திரம், சீர்காழி, பரங்கிப்பேட்டையில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

  மிக பலத்த மழை பெய்யும்

  மிக பலத்த மழை பெய்யும்

  கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  கடலோரங்களில் வசிக்கும் மக்களே பாதுகாப்பாக பத்திரமாக இருங்க என்று எச்சரிக்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Tamil Nadu Met office predicted that the rains will continue for the next 3 days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற