For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரத்தில் பரவலாக மழை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நாகை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை நேற்று இரவு பெய்தது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இடைவிடாத மழை கொட்டி வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. திருவாரூர், தஞ்சையில் 6வது நாளாக மழை கொட்டியது.

Heavy rains lash parts of TN

நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக இருந்ததால் 3வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகப்பட்டினத்தில் கதிர்வரும் நேரத்தில் கனமழை கொட்டியதால் பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல் விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. விழுப்புரம் மாவட்டத்தில் மலைகிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

English summary
Heavy rains yesterday lashed parts of Tamil Nadu including Nagai, Thiruvarur, Dindigul, Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X